Wednesday, October 9, 2013

mazhaiye mazhaiye lyrics-iruvar ullam tamil song lyrics / மழையே மழையே

Movie Name:Iruvar ullam
Song Name:Mazhaiye mazhaiye
Singers:Andrea Jeremiah
Music Director:Vijay Antony
Cast:Vinay,Payal Gosh
Year of release:2013

Lyrics:-
Mazhaiye mazhaiye
Dhoorathil irunthu nanaikkathe
Manadhil nuzhainthu ovvoru
Araiyaai thirakkaathe

Alaiye alaiye
Azhagaal ennaik kudikkaathe
Aasai ennum puyalukku ulle izhukkaathe

Idhazhil idhazhaal kirukkaathe
Imaiyaik kanavaal norukkaathe
Ithanai mazhai thaan sattena adithaal
Chinnanchiru idhayam thaangathe

Mazhaiye mazhaiye ...

Aan oru karai thaan
Pen oru karai thaan
Kaadhal nadhiyaai naduvinil vanthu
Inaikkirathe inaikkirathe
Ayiram vaarthai paarvaiyil irunthum
Adhai vida mounam pesum bhaashai
Pidikkirathe pidikkirathe

Pudhidhaai varuthe poo vaasam adada
Enakkul un vaasam
Idhu anbaal ezhuthum ithikaasam
Naampooppathu engo pudhu nesam
Ini vizhiyum viralum
Viralum vizhiyum kadhai pesum

Mazhaiye mazhaiye ...

Mel imai azhaikka
Keezh imai thadukka
Ithu thaan kaadhal kannil
Nadathum kalavarama kalavarama

Poo idhazh thudikka
Vaer varai vedikka
Vetkam naanam acham
Inimel thunai varuma thunai varuma

Mayakkam edhire valai veesum
Thaykkam udane thadai veesum
Ini dhinamum karaiyil alai veesum
Antha alaiyil mothathil manam pesum
Ini vizhiyum viralum
Viralum vizhiyum kadhai pesum

மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே
மனதில் நுழைந்து ஒவ்வொரு அறையாய் திறக்காதே
அலையே அலையே அழகால் என்னைக் குடிக்காதே
ஆசை என்னும் புயலுக்கு உள்ளே இழுக்காதே


இதழில் இதழால் கிறுக்காதே
இமையைக் கனவால் நொறுக்காதே
இத்தனை மழை தான் சட்டென அடித்தால்
சின்னஞ்சிறு இதயம் தாங்காதே

மழையே மழையே ...

ஆண் ஒரு கரை தான் பெண் ஒரு கரை தான்
காதல் நதியாய் நடுவினில் வந்து
இணைக்கிறதே இணைக்கிறதே
ஆயிரம் வார்த்தை பார்வையில் இருந்தும்
அதை விட மௌனம் பேசும் பாஷை
பிடிக்கிறதே பிடிக்கிறதே
புதிதாய் வருதே பூ வாசம் 

அடடா எனக்குள் உன் வாசம்
இது அன்பால் எழுதும் இதிகாசம்
நாம் பூப்பது எங்கோ புது நேசம்
இனி விழியும் விரலும்
விரலும் விழியும் கதை பேசும்

மழையே மழையே ...

மேல் இமை அழைக்க கீழ் இமை தடுக்க
இது தான் காதல் கண்ணில் நடத்தும்
கலவரமா கலவரமா
பூ இதழ் துடிக்க வேர்வரை வெடிக்க
வெட்கம் நாணம் அச்சம் இனிமேல்
துணைவருமா துணைவருமா

மயக்கம் எதிரே வலைவீசும்
தயக்கம் உடனே தடை வீசும்
இனி தினமும் கரையில் அலைவீசும்
அந்த அலையில் மொத்தத்தில் மனம் பேசும்

மழையே மழையே  ....

http://www.youtube.com/watch?v=QU2DHyEg_40



No comments:

Post a Comment