Monday, October 21, 2013

chinna nenjile lyrics-jairam tamil song lyrics / சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை

Movie Name:Jairam
Song Name:Chinna nenjile
Singer:Sumangili
Music Director:Anoop
Lyricist:Vairamuthu
Year of release:2004

Lyrics:-

Chinna nenjile nooru  kodi aasai
Aasai pesave podhavillai bhaashai
Inbamo thunbam seiyuthe
Thunbamo inbam seiyuthe
Aal illaamal pesa thonuthe
Aatkal kandathum pechu nindrathe
Idharku per kaadhal enbatha ?

Chinna nenjile ...

Ottraich siragu kondu sutrip paarkkum kili pol
Thathai nenju thathalikkuthe
Thoongum podhu vizhithu naan vizhitha pinbum kanavu
Vayasu ennai vambu seiyuthe
Maalai neram vanthaal en manathil naanam illai
Maarbil ulla aadai en pechaik ketkavillai
Idhaya koodaiyil pookkal niraiyuma ?
Idharku per kaadhal enbatha ?

Chinna nenjile nooru  kodi aasai
Aasai pesave podhavillai bhaashai

Manasin pallam thedi puyal maiyam kondathenna
Endha neram karaiyaik kadakkumo ?
Kadalil alaigal pole en udalil alaigal thondri
Bhoomi sutri konthalikkumo ?
Enna nerum endru en arivu ariyavillai
Ragasiyangal arinthaal adhil rasanai yedhum illai
Ennaik kolvatha ? ilaiya manmatha ?
Idharku per kaadhal enbatha ?

Chinna nenjile ...

Chinna nenjile nooru  kodi aasai
Aasai pesave podhavillai bhaashai

சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை
இன்பமோ துன்பம் செய்யுதே
துன்பமோ இன்பம் செய்யுதே
ஆளில்லாமலே பேச தோணுதே
ஆட்கள் கண்டதும் பேச்சு நின்றதே
இதற்கு பேர் காதல் என்பதா ?
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை

ஒற்றைச் சிறகு கொண்டு சுற்றிப் பார்க்கும் கிளி போல்
தத்தை நெஞ்சு தத்தளிக்குதே
தூங்கும் போது விழித்து நான் விழித்த பின்பும் கனவு
வயசு என்னை வம்பு செய்யுதே
மாலை நேரம் வந்தால் என் மனதில் நாணம் இல்லை
மார்பில் உள்ள ஆடை என் பேச்சைக் கேட்கவில்லை
இதய கூடையில் பூக்கள் நிறையுமா ?
இதற்கு பேர் காதல் என்பதா ?

சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை

மனசின் பள்ளம் தேடி புயல் மையம் கொண்டதென்ன
எந்த நேரம் கரையைக் கடக்குமோ?
கடலில் அலைகள் போலே
என் உடலில் அலைகள் தோன்றி
பூமி சுற்றி கொந்தளிக்குமோ ?
என்ன நேரும் என்று என் அறிவு அறியவில்லை
ரகசியங்கள் அறிந்தால் அதில் ரசனை ஏதும் இல்லை
என்னைக் கொல்வதா ? இளைய மன்மதா
இதற்கு பேர் காதல் என்பதா ?

சின்ன நெஞ்சிலே ....

சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை

http://www.youtube.com/watch?v=YOMNRJRNU3Y



No comments:

Post a Comment