Saturday, November 23, 2013

en kaadhal thee lyrics-irandam ulagam tamil song lyrics / என் காதல் தீ

Movie Name:Irandam ulagam
Song Name:En kaadhal thee
Singer:S.P.Balasubramanium
Music Director:Harris Jeyaraj
Lyricist:Vairamuthu
Cast:Arya,Anushka
Year of releasE:2013


Lyrics:-

En kaadhal thee thee vaasam nee
Kan paarthom vaa kai serppom vaa
Pala uyirgal eriyum udalgal maariyum
Payanappaduvathu kaadhal
Kaadhal saadhal

Kaadhal saadhal rendum ondru enne vindhaiyadi
Andha sorgam poga rendum vendum
Kanne unmaiyadi
Kaadhal saadhal rendum ondru enne vindhaiyadi
Andha sorgam poga rendum vendumadi

En kaadhal thee thee vaasam nee
Kan paarthom vaa kai serppom vaa

Udalgal irandum serum mun
Ullam irandum serume
Udalin vazhiye uyiraith thoduvathu kaadhale
Idhayam irandum dhooram thaan
Idhazhgal naangum arugil thaan
Idhazhgal vazhiye idhayam thoduvathu kaadhale
Oosi podum rendu kangalil
Uyiraik kudithaval nee
Uyaram kaattum pookkal irandinil
Ulagai udaippaval nee

Kaadhal saadhal rendum ondru enne vindhaiyadi
Andha sorgam poga rendum vendum
Kanne unmaiyadi
Kaadhal saadhal rendum ondru enne vindhaiyadi
Andha sorgam poga rendum vendumadi

Ulagil kaadhal pazhaiyathu
Utra pozhuthe pudhiyathu
Ellaa nilathum ellaa pozhuthum nigazhvathu
Ulagin neruppu kaadhale
Uyiril iruppu kaadhale
Unmaik kaadhal ulagai vidavum periyathu
Kurinji mullai marutham neithalil kulungum poovithuve
Paalai veyililum kaanal veliyilum padarum nizhal ithuve

Kandaar mayangum vandaar malare
Nindror mozhi solladi
Un pinne piranthu munne valarnthathu
Enne sezhumaiyadi
Pinne piranthu munne valarnthathu
Enne sezhumaiyadi

Adhai mutham eduthu siththam thudikkuthadi
Pen paavaai vaa kan paavaai vaa
Sengodaai vaa senthaenaai vaa

என் காதல் தீ தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா
பல உயிர்கள் எரியும் உடல்கள் மாரியும்
பயணப்படுவது காதல்
காதல் சாதல்

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும்
கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி

என் காதல் தீ தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா

உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரைத் தொடுவது காதலே
இதயம் இரண்டு்ம் தூரம் தான்
இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே
ஊசி போடும் ரெண்டு கண்களில்
உயிரைக் குடித்தவள் நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில்
உலகை உடைப்பவள் நீ

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும்
கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி

உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெருப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மைக் காதல் உலகை விடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில்
குலுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் கானல் வெளியிலும்
படரும் நிழில் இதுவே

கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி
பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி

அதை முத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி
பெண் பாவாய் வா கண் பாவாய் வா
செங்கோடாய் வா செந்தேனாய் வா

http://www.youtube.com/watch?v=6d6N8-Mo8sI



No comments:

Post a Comment