Wednesday, December 11, 2013

sengaade sirukarade lyrics-paradesi tamil song lyrics / செங்காடே சிறுகரடே


Movie Name:Paradesi
Song Name:Sengaade sirukarade
Singers:Madhu balakrishnan,Pragathi
Music Director:G.V.Prakash Kumar
Lyricist:Vairamuthu
Cast:Adharwa
Year of release:2013


Lyrics:-

Ho sengaade sirukarade poi varava
Ho kaadugale kalligale poi varava
Sudu sudu kaadu vittup pogira ponanga pola
Sana sana sanangal ellaam poguthu paadha mela
Ullooril kaakka kuruvi irai theduthe
Oh pasiyodu manusa koottam veliyeruthe
Soththa kalliyum mullum thachathum pothu ozhugume baalu
Kaalangaalama azhuthu theerthuttom kannil illaiye neeru
Vaattum panjathil kokku kaala pola vathi pochchaya vaazhvu
Koottang koottama vaazha pogirom kooda varuguthe saavu

Ho sengaade sirukarade poi varava
Ho kaadugale kalligale poi varava

Velaiyaatha kaatta vittu vilaiyaanda veetta vittu
Vellanthiya vegulich sanam veliyeruthe oh
Vaazhvodu kondu vidumo saavodu kondu vidumo
Pogum thesa sollaamale vazhi neeluthe
Uyirodu vaazhvathu kooda siru thunbame ho
Vayirodu vaazhvathu thaane perum thunbame
Pollaadha vidhiyin mazhaikka porome panjam pozhaikka
Yaar meelvadho yaar vaazhvatho yaar kandathu

Paalam paalama vedichu kidakkuthe paadu pattavan bhoomi
Vedicha bhoomiyil pudhaikka paakkuthe kedu kettavan saami
Puliyang kottaiya avichu thinnu thaan pozhaichu kidakkuthu meni
Panjam pozhaikkavum pasiya theekkavum pachai bhoomiya kaami

Ho sengaade sirukarade poi varava
Ho kaadugale kalligale poi varava

Kaalodu sarala kizhikka kannodu puzhuthi adikka
Oor thaandiye oor thediye oor poguthe
Karuvelangaadu kadanthu kalloothum medum kadanthu
Oor seralaam usur seruma vazhi illaiye
Kangaani pecha nambi sanam poguthe oh
Nandugala koottik kondu nari poguthe
Udal mattum mudhaleedaga oru nooru sanam poraaga
Uyir meelumo udal meelumo yaar kandathu

Soththa kalliyum mullum thachathum pothu ozhugume paalu
Kaalangaalama azhuthu theerthuttom kannil illaiye neeru
Vaattum panjathil kokku kaala pol vathi pochchaya vaazhvu
Koottang koottama vaazha pogirom kooda varuguthe saavu

Ho sengaade sirukarade ....

ஹோ செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ காடுகளே கள்ளிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்கள் எல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இர தேடுதே
ஒ பசியோடு மனுசக் கூட்டம் வெளியேருதே
சொத்த கள்ளியும் முள்ளு தச்சதும் பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீர்த்துட்டோம் கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல் வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு

ஹோ செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ காடுகளே கள்ளிகளே போய் வரவா

வெளையாத காட்ட விட்டு விளையாண்ட வீட்ட விட்டு
வெள்ளந்தியா வெகுளிச் சனம் வெளியேருதே ஓ
வாழ்வோடு கொண்டு விடுமோ சாவோடு கொண்டு விடுமோ
போகும் தெச சொல்லாமலே வழி நீளுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஹோ
வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே
பொல்லாத விதியின் மழைக்க போறோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது

பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புளியங்கொட்டைய அவிச்சு தின்னு தான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தீக்கவும் பச்சை பூமிய காமி

ஹோ செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ காடுகளே கள்ளிகளே போய் வரவா

காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங்காடு கடந்து கல்லூத்தும் மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கங்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீளுமோ உடல் மீளுமோ யார் கண்டது

சொத்த கள்ளியும் முள்ளும் தச்சதும் பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீர்த்துட்டோம் கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல் வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு

ஹோ செங்காடே சிறுகரடே ....

http://www.youtube.com/watch?v=5Ldh3vyoW-Q



No comments:

Post a Comment