Saturday, December 7, 2013

kaadhal oru lyrics-marina tamil song lyrics / காதல் ஒரு தேவதையின்


Movie Name:Marina
Song Name:Kaadhal oru
Singer:Haricharan
Music Director:Girish
Lyricist:Na.Muthukumar
Cast:Sivakarthikeyan,Oviya
Year of release:2012


Lyrics:-

Kaadhal oru devadhaiyin kanava
Thollai tharum raatchashiyin ninaiva
Kaadhal nammaith thookkich sellum siraga
Kaaladiyil sarukkidum saruga

Kaadhal kan rendum sandhithup esum mozhiya
Illai kaanaadha oorukkup pogum vazhiya
Kaadhal oyaamal vaayadum alai kadala
Illai mounathil thandikkum siraik kadhava

Kaadhal oru devadhaiyin kanava
Thollai tharum raatchashiyin ninaiva

Kaadhal anal tharum veyila
Punal tharum mazhaiya
Bhayam tharum puyala
Inthak kaadhal
Vanam tharum agila
Marainthidum thigila
Maayam thana
Kaadhal minnalin thugala
Mirattidum irula
Maayavan seyala
Inthak kaadhal malargalin thidala
Mutkalin thodala
Kaayam thana

Kaanal alaiya
Verum kaatchip pizhaiya
Illai gangaiyile
Pongi varum thanneer idhuva
Thoondil valaiya
Nenjaith thaakkum kolaiya
Irunthum vaazha vaikkum
Maruntha viruntha

Kaadhal oru ....

Kaadhal kanadhavan kanava
Dhavangalin thavama
Varangalin varama
Inthak kaadhal kadavulin inama
Asuranin gunama
Vidaigal illai

Kaadhal piraviyin bayana
Thurathidum kadana
Ularidum thirana
Inthak kaadhal imsaiyin magana
Rasithidum murana
Solvaar illai

Pookkal kadaiya
Uyir vaangum kadhaiya
Idhu vetri tholvi rendum
Ondraai modhum padaiya
Nyaana nilaiya
Poi pesum kalaiya
Thooral nindru pinbum thoorum nilaiya

Kaadhal oru ....

காதல் ஒரு தேவதையின் கனவா
தொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா
காதல் நம்மைத் தூக்கிச் செல்லும் சிறகா
காலடியில் சறுக்கிடும் சருகா

காதல் கண் ரெண்டும் சந்தித்துப் பேசும் மொழியா
இல்லை காணாத ஊருக்குப் போகும் வழியா
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறைக் கதவா

காதல் ஒரு தேவதையின் கனவா
தொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா

காதல் அனல் தரும் வெயிலா
புனல் தரும் மழையா
பயம் தரும் புயலா
இந்தக் காதல்
வனம் தரும் அகிலா
மறைந்திடும் திகிலா
மாயம் தானா
காதல் மின்னலின் துகளா
மிரட்டிடும் இருளா
மாயவன் செயலா
இந்தக் காதல் மலர்களின் திடலா
முட்களின் தொடலா
காயம் தானா

கானல் அலையா
வெறும் காட்சிப் பிழையா
இல்லை கங்கையிலே
பொங்கி வரும் தண்ணீர் இதுவா
தூண்டில் வலையா
நெஞ்சைத் தாக்கும் கொலையா
இருந்தும் வாழ வைக்கும்
மருந்தா விருந்தா

காதல் ஒரு ....

காதல் கனவதன் கனவா
தவங்களின் தவமா
வரங்களின் வரமா
இந்தக் காதல் கடவுளின் இனமா
அசுரனின் குணமா
விடைகள் இல்லை

காதல் பிறவியின் பயனா
துரத்திடும் கடனா
உளரிடும் திறனா
இந்தக் காதல் இம்சையின் மகனா
ரசித்திடும் முரணா
சொல்வார் இல்லை

பூக்கள் கடையா
உயிர் வாங்கும் கதையா
இது வெற்றி தோல்வி ரெண்டும்
ஒன்றாய் மோதும் படையா
ஞான நிலையா
பொய் பேசும் கலையா
தூரல் நின்று பின்பும் தூறும் நிலையா

காதல் ஒரு ....

http://www.youtube.com/watch?v=3-JqxhSR9Sc


No comments:

Post a Comment