Tuesday, January 28, 2014

ulagil entha kaadhal lyrics-nadodigal tamil song lyrics / உலகில் எந்த காதல்

Movie Name:Naadodigal
Song Name:Ulagil endha kaadhal
Singer:Hariharan
Music Director:Sundar.C.Babu
Lyricist:Yugabharathi
Cast:Sasi kumar,Ananya,Abhinaya
Year of release:2009

Lyrics:-

Ulagil entha kaadhal udane jeyithathu
Valigal thaangum kaadhal migavum valiyathu
Kaadhal thotrathaai kadhaigal yedhu
Thottraal thottrathu kaadhal aagaathu
Ellaame santharpam karppikkum thappartham

Ulagil entha kaadhal udane jeyithathu
Valigal thaangum kaadhal migavum valiyathu

Ninaivugalaale nichayathaartham
Nadanthathu avanodu
Avanai allaathu aduthavan maalai
Yerppathu perumpaadu
Oru puram thalaivan marupuram thagappan
Iru kolli erumbaanaal
Paasathukkaaga kaadhalaith tholaithu
Aaalaiyil karumbaanaal
Yaar kaaranam aaha
Yaar paavam yaaraich serum
Yaar thaan solla
Kanneer vaarthaal kanni maane
Suttram seitha kuttram thaane

Uyiril pookkum kaadhal unarvin vaanilai
Unarvaip paarppathaethu uravin soozhnilai

Manamennum kulathil
Vizhi ennum kallai
Mudhal mudhal erinthaale
Alai alaiyaaga aasaigal ezhumba
Aval vasam vizhunthaane
Nadhi vazhip ponaal karai varak koodum
Vidhi vazhip ponaane
Vidhai ondrup poda vaer ondru mulaitha
Kadhai endru aanaane
En solvathu en solvathu
Thaan konda natpukkaaga
Thaane theinthaan
Karpaip pole natpaik kaathaan
Kaadhal thorkum endraa paarthaan

Ulagil endha kaadhal ....

உலகில் எந்த காதல் உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல் உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

நினைவுகளாலே நிட்சியதார்த்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன்
இரு கொள்ளி எரும்பானாள்
பாசத்துக்காக காதலைத் தொலைத்து
ஆலையில் கரும்பானாள்
யார் காரணம் ஆஹா
யார் பாவம் யாரைச் சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம் தானே

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வானிலை
உணர்வைப் பார்ப்பதேது உறவின் சூழ்நிலை

மனமென்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதல் முதல் எரிந்தாளே
அலைஅலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
நதி வழிப் போனால் கரை வரக்கூடும்
விதி வழிப் போனானே
விதை ஒன்றுப் போட வேர் ஒன்று முளைத்த
கதை என்று ஆனானே
என் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக
தானே தேய்ந்தான்
கற்பைப் போலே நட்பைக் காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் ....
http://www.youtube.com/watch?v=N8A9cmEtG8w

No comments:

Post a Comment